• சூரிய உதயம்: 6:29 AM
  • சூரிய அஸ்தமம்: 6:05 PM
[email protected] +91 94431 71171‬

ஜமாஅத்தை பற்றி…

வடக்கு தெரு ஜமாஅத் நிர்வாக சபை

கீழக்கரை என்றவுடன் செத்தும் கொடை கொடுத்தார் வள்ளல் சீதக்காதி என்பது நினைவுக்கும் வரும்.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் இஸ்லாமிய சட்டத் தொகுப்பு உருவாக்கிய போது அதில் கலந்து கொண்டு சட்டங்களை கோர்வை செய்து கொடுத்தவர்களில் ஒருவருமான மகான் சதக்கதுல்லா அப்பா, தென்தமிழகத்தில் இஸ்லாமிய மெஞ்ஞான ஒளி பரப்பிய பல்லாக்கு வலியுல்லா இன்னும் ஏராளமான வலியுல்லாக்கள் அடங்கி அருளாசி வழங்கும் ஊர் கீழக்கரை.

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வலியுல்லா போன்ற சட்ட மேதைகள் அரபுத்தமிழ் அரபு எழுத்தில் தமிழ் ஒலி வடிவத்திலான மொழியினை பரப்பியதில் கீழக்கரை அறிஞர்களுக்கு பெரும் பங்குண்டு.

இந்த ஊரில் இஸ்லாம் வந்த நாளிலிருந்து இன்றுவரை முழுக்க முழுக்க நான்கு மதுஹபுகளுக்கு உட்பட்டு சுன்னத் ஜமா-அத் கொள்கைகளை அணு அளவும் தவிர்க்காமல் பின்பற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்று, மேலும் எங்கள் வடக்குத் தெரு ஜமா-அத் மிகவும் பாரம்பரியம் கொண்ட மிகப்பெரிய ஜமாஅத் ஆகும்.

இன்றைய கீழக்கரையில் உள்ள வடக்குத் தெரு, பள்ளிவாசல் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். வடக்குத் தெரு ஜமாஅத்தின் 600 வருடம் பழமையானது அதற்கு ஆதாரமாக வக்ப் போர்டு பிரோபோமா ரிப்போட்டில் உள்ளது.

அக்கால கட்டத்தில் இங்கு வந்த வரலாற்று பயண குறிப்பாளர் இபுனுபதுதா வடக்குத் தெரு, பள்ளிவாசல் அருகில் வசித்து வந்த அஸ் செய்கு முகம்மது மஸ்தூபி என்ற நிசாபூரி மகான் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவரை இபுனுபதுதா சந்தித்தாக வரலாறு உள்ளது. தற்போது கீழக்கரை வடக்குத் தெருவில் அடங்கியிருக்கும் சேகப்பா தான் என்பதற்கு தகுந்த ஆதாரம் உள்ளது. இபுனுபதுதா எழுதியுள்ள பயணக்குறிப்பில் இங்கு வந்து சேகப்பா என்ற மகானை பார்த்து அப்பொழுது இருந்தது கல்லுபள்ளி தற்போது புது வடிவில் தோற்றம் தரும் மஸ்ஜித் மன்பஈ ஆகும். 

கொடிக்கால் மணலுங்கண்டேன் செம்பொன் குடம்வைத்த வேகாந்தர் மடமும் கண்டேன் கடைத்தலை வீதிகண்டேன். லெப்பைமார் கலிமாரோதும் பள்ளிவாயல் கண்டேன் (கடைத்தலை என்றால் கடைத் தெரு, கலி மாரோதும் என்றால் தொழுகையை முன்னிறுத்தி பாங்கு சொல்வதை கலிமாரோதும் என்று பொருள் படும்) என்று வள்ளல் சீதக்காதி காலத்தில் நடைபெற்ற நொண்டி நாடக பாடல் 174-ல் குறிப்பிடுவது வடக்குத் தெரு பள்ளிவாசலைத் தான். இது சில தடவை இடம் பற்றாக்குறையால் கல்லுதூண் அமைத்து விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பெரிய மஸ்ஜித் மன்பஈ பள்ளியாக காட்சித் தருகிறது. மேற்படி பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகத்தில் 1957-ல் புதுப்பள்ளியாக கட்டி ஜமாஅத் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல் சிறப்பாக நடைபெற்றது.

எங்கள் பள்ளிவாசல் மற்றும் ஜமாஅத் நிர்வாகம் மார்க்க பணிகளையும், சமூதாயப் பணிகளையும், சிறப்புர செய்து வருவதுடன் அதற்கு பாத்தியப்பட்ட சேகப்பா தர்ஹா, கொந்தக் கருணையப்பா தர்ஹா, முகைதீன் தைக்கா, மற்றும் புலவர் களஞ்சியம் தோப்பு, மஸ்ஜித் மன்பஈ பள்ளிவாசல் தெற்கு பக்கம் மற்றம் வடக்கு பக்கம் உள்ள பழைய மையவாடி முகைதீனிய்யா மேல்நிலைப் பள்ளி புலுவா ஊரணியில் உள்ள சேகு மதார் அப்பா தர்ஹா மற்றும் இடிவிழுந்தான் குண்டு புதிய மையவாடி சொத்துக்களை எல்லாம் பாதுகாத்து, பராமரித்து பரிபாலனம் செய்து வருவதற்கு நம்முடைய முன்னோர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஜமாஅத் தான் வடக்குத் தெரு நிர்வாக சபை ஆகும்.

இந்த வடக்குத் தெரு நிர்வாக சபை, சுன்னத்துவல் ஜமாஅத் வழிமுறைப்படி தொழுகை மற்றும் இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளில் பின்பற்றி நடந்து வருவதாகும். இந்த நிர்வாக சபைக்கு மேற்கண்ட சொத்துக்கள் அனைத்தும் கட்டுபட்டவையாகும். இந்த வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாக சபை சுன்னத்துவல் ஜமாஅத் அங்கத்தினரால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு செயல்படும்.

ஜமாஅத் விவகார எல்லை

ஜமாஅத் விவகார எல்லை என்பது தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா, கீழக்கரை நகராட்சி, வடக்குத் தெருவுக்குட்பட்ட இடங்களைக் குறிக்கும். இதில் காலவா சந்து, ரகுமானிய நகர், ரஹ்மான் நகர், பழைய ஈசூப் சுலைஹா மருத்துவ மனை சாலை, ஆகியவைகள் அடங்கும்.

ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் விபரங்கள்...

1963 – 1970 மு.பி.சே காதர் சாகிபு

1970- 1974 பி.எம்.எஸ் செய்யது அப்துர்ரஹ்மான்

1974 – 1976 கே.எம். அப்துல்லாஹ்

1976- 1976 பி.எம்.எஸ் செய்யது அப்துர்ரஹ்மான்

1976- 1977 கே.எம்.எஸ் அப்துர் ரசாக்

1977- 1988 பி.எம்.எஸ் செய்யது அப்துர்ரஹ்மான்

1988 – 1991 ரத்தின முகம்மது

1991 – 1997 கே.எம்.அப்துல்லாஹ்

1997 – 2003 ரத்தின முகம்மது

2003-2013 – கே.எம்.எஸ் பசீர்

2013-2016 அக்பர் கான்

2016 – இன்று வரை ரத்தின முகம்மது

கீழக்கரை வடக்குதெரு நிர்வாக சபை - Copyright 2024. Designed by Intelligence Infotech